யாழில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒன்றரை வருடங்களின் பின் கைது!

கோண்டாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களின் பின் மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்த 26 வயதேயான பிரதான சந்தேகநபரே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணம்

2021ஆம் ஆண்டு 6ஆம், 30ஆம் திகதிகளில் கோண்டாவில் செல்வபுர பகுதியில் கலையகம் ஒன்றினை தீவைத்துக் கொளுத்தி அங்கிருந்த ஆறு பேரை வெட்டி காயப்படுத்தி அங்கிருந்த வாகனம் ஒன்றினையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தநிலையில ஒன்றரை வருடங்களின் பின்னர் நேற்றுயதினம் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.