காலாவதியாகும் நிலையில் நாட்டில் 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள்

எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பைசர் தடுப்பூசியின் எஞ்சிய தடுப்பூசிகள் உரிய முறைகளைப் பயன்படுத்தி அகற்றப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய தொகுதி இறக்குமதி

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு, புதிய தொகுதி இறக்குமதி செய்யப்படும் வரை, பைசர் தடுப்பூசி இனி நாட்டில் கிடைக்காது என்று, சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

எனவே தடுப்பூசிகள் காலாவதியாகும் முன், பைசரின் இரண்டாவது பூஸ்டர் அளவுகளை அவசரமாகப் பெறுமாறு பொதுமக்களிடம் ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.