கனடாவில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

கனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் 19 மற்றும் முடக்க நிலைமைகளினால் இவ்வாறு குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் ஒரு லட்சம் பேருக்கு 336 பேர் குடும்ப வன்முறைகளினால் பீடிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் கனடா முழுவதிலும் குடும்ப வன்முறைகளினால் 127082 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் குடும்ப வன்முறைகள் உயர்வு? ஏன் தெரியுமா | Canada Covid Family Violence Increase

குடும்ப வன்முறைகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று மற்றும் முடக்க நிலைமைகளினால் அதிகளவு மக்கள் குடும்ப வன்முறைகளுக்கு உட்பட நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஆண்கள் வீட்டிலேயே இருந்த காரணத்தினால் இவ்வாறு வன்முறைச் சம்பங்களின் எண்ணிக்ழைக உயர்வடைந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.