பிரான்சில் அதிகரிக்கப்பட்டுள்ள உதவி தொகை!

பிரான்ஸில் மின்சார கார்கள் வாங்குபவர்களுக்காக உதவித்தொகை அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார கார்கள் வாங்குபவர்களுக்கு உதவித்தொகையாக அரசாங்கம் 6,000 யூரோக்கள் வழங்கி வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த தொகையானது 7,000 யூரோக்களாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

ஊடகத்துக்கு அவர் அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். “மக்கள் தங்கள் வாகனத்தை மாற்ற உதவ வேண்டும். ஏனென்றால் மின்சார கார்களை அனைவராலும் வாங்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

உதவித்தொகை 6,000 யூரோவில் இருந்து 7,000 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது. இது நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 2035 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீத வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் நோக்கத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இது நமது காலநிலை நோக்கங்களை அடைவதற்கு அவசியமானது மற்றும் நமது நாட்டை மீண்டும் தொழில்மயமாக்குவதற்கான வாய்ப்பாகும். மின்சார கார் வாங்கும் போது குறைந்த வருமானத்தில் உள்ள பாதி குடும்பங்களுக்கு 7,000 யூரோக்கள் வரை செலுத்த வேண்டும்.

மற்ற குடும்பங்களுக்கு 5,000 யூரோக்கள் வழங்கப்படும். இந்த கார்களின் அதிகரிப்பின் ஊடாக ஐரோப்பாவை மீண்டும் தொழில்மயமாக்குவதற்கான பாரிய கொள்கைக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் போட்டியை எதிர்கொண்டு ஐரோப்பிய வாகனத் தொழிலுக்கு வலுவான நிலையை ஏற்படுத்த அவசியமான ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அதிக உதவித் தொகை பெறும் குடும்பங்களின் வருமான வரம்பு என்னவாக இருக்கும் அல்லது அதிகரிக்கப்பட்ட தொகை எப்போது கிடைக்கும் என்பதை ஜனாதிபதி இதன் போது குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது