இவ் வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6வது சீசன்
பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி 1 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஓடிடியில் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

நிகழ்ச்சி மீதம் ஓடிடி என ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

அசல் குயின்ஸியிடம் தவறாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் இப்போது பல வீடியோக்களை வெளியிட்டு கோபப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் பேசுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

எலிமினேஷன்
இன்னொரு பக்கம் வீட்டில் இருந்து எலிமினேட் செய்ய இருப்பவர் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

தனலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவந்த நிலையில் இப்போது மகேஸ்வரி தான் வீட்டைவிட்டு செல்ல வேண்டும், எல்லோரின் விஷயத்திலும் மூக்கை நுழைத்து வருகிறார் என ரசிகர்கள் கோபமான கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே இந்த மகேஸ்வரி எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கதாக சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.