இலங்கையின் நிலை குறித்து பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டுள்ள செய்தி!

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நெருக்கடி

உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல பல நெருக்கடிகளை இலங்கையும் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம்.

உணவு பிரச்சினை ஏற்படலாம். ஏற்கனவே மிக பெரிய அளவில் வீழ்ந்து போயுள்ள இலங்கை போன்ற நாட்டிற்கு இன்னும் விழுவதற்கு சிறிய அளவே உள்ளது. இதனால் இதன் தாக்கத்தை இதற்கு மேலும் உணரும் அளவிற்கான தைரியம் மக்களிடம் இல்லை.

சரியான திட்டமிடல்

இந்த நிலையில் மீண்டு வருவதற்கு உரிய முறையில் கொள்கைகளை தயாரிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்று மீண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.