தினமும் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தமிழர்களின் ருசியான உணவுகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் “தேங்காய்”, உலகளவில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கிய பங்காற்றுகிறது.

இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று தின்பதால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து விடும்.

வகைவகையாக உணவுகளை சாப்பிடுவதை விட, ஒரு சிறிய துண்டு தேங்காய் நமக்கு புத்துணர்ச்சியை வழங்கிவிடும்.

தினமும் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இதில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.

வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.

இதில் உள்ள புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இது ஒரு மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பு பண்டமாகும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன் நுண்கிருமிகளை அழித்து தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் மென்று சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக கிடைத்துவிடும், மேலும் நம் உடலின் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியையும் அதிகரித்துவிடும்.