இன்றைய ராசிபலன் 30.08.2022

மேஷம்

மேஷம்: அனுப பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ஆடம்பர செலவுகளை குறைக்க சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்த வகையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாருக்கு அசதிசோர்வு வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள் . அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடயே மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலி பேச்சிருக்கும் ஆளாவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டு வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் தேவையற்ற இழப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு கூடும் நாள்.

தனுசு

தனுசு: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குறியவர்களை சந்தித்து சில ஆலோசனை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மொத்தத்தில் உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பிரச்னைகள் வந்து விலகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணம் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.