20 ஆண்டுகளின் பின்னர் தரம் 12ல் சித்தி எய்தியே கனேடிய பெண்

கனேடிய பெண் ஒருவர், 20 ஆண்டுகளின் பின்னர் தரம் 12ல் சித்தி எய்திய சம்பவம் அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவைச் சேர்ந்த ட்ராசி மெக்டொனால்ட் என்ற பெண்ணே இவ்வாறு தரம் 12ல் சித்தி எய்தியுள்ளார்.

தாய் தன்னை விட்டு சென்றதன் பின்னர் தரம் 12 பரீட்சைக்குத் தோற்றிய போதிலும் சித்தி எய்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறெனினும் பரீட்சையில் சித்தி எய்த வேண்டும் என்ற உந்துதல் தமக்குள் இருந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

ஐந்து பிள்ளைகளின் தாயான ட்ராசி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு பிள்ளைகளை வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியை தொடராமல் இருப்பதற்கு பல காரணிகள் இருந்தாலும் அந்த அனைத்து சவால்களையும் வென்று பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து ட்ராசி டிப்ளோமா பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

முதல் தடவை பரீட்சைக்கு தோற்றிய போது ஆங்கில பாடத்தில் ட்ராசியா சித்தி எய்தவில்லை என்ற போதிலும் இரண்டாவது முயற்சியின் போது அவர் சித்தி எய்தினார்.

தனது வாழ்க்கைச் சரிதம் தொடர்பிலான நூல் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தம்மை போன்று கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ விரும்புவதாகவும் ட்ராசி தெரிவித்துள்ளார்.