பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

மாலை 7 மணியளவில் ரயில் Saint-Etienne பகுதியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென பெண் ஒருவர் கத்தி கூச்சலிடும் போது பயணிகள் உடனடியாக அந்த பெண் மீது அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் ஒரு பெண் பாவாடை அணிந்ததனை பார்த்ததில்லையான என அரை வாங்கிய பெண் சத்தமான வினவியுள்ளார்.

அந்த பெண்ணை அரைவதற்கு முன்னரே அவரது ஆடை மிகவும் குட்டையாக உள்ளதென கூறியதுடன், அந்த பெண்ணின் மீது எச்சில் துப்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண் சம்பவம் தொடர்பில் ரயில் அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த நபர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அவரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.