இலங்கையில் 55 இலட்சம் பேரின் பொருளாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது!

மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சிமென்ட் செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

இவ் மின்கட்டண உயர்வால் கட்டுமானத் தொழில் தொடர்பான அனைத்து தொழில்களும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அத்தொழிலில் பணிபுரியும் சுமார் 55 இலட்சம் பேரின் பொருளாதாம் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை 52 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும், இந்த சிக்கலான சூழ்நிலையில் அரசு பெறும் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் இப்பிரச்சினைக்கு திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், இந்நாட்டில் நிர்மாணத்துறை முற்றாக வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.