முல்லைத்தீவு ஐ.ஓ.சி எரி பொருள் நிலையத்தில் தீ விபத்து!

முல்லைத்தீவில் அமைந்துள்ள ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்த போது திடீரென தீப்பற்றி உள்ளது.

குறித்த தீவிபத்தையடுத்து அங்கு பதற்றமான நிலை உருவானது.

எனினும் விரைந்து செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தீயினை உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இது பற்றி போலிஸ் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளது.