முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் வழங்குவதில் புதிய நடைமுறை!

பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எவ்வகையிலும் போதுமானதல்ல எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைகளைப் போன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முச்சக்கரவண்டிகளையும் உள்வாங்க வேண்டும், இல்லையெனில் இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி ஊழியர்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவார்கள் என கூறியுள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடாத முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 5 லீற்றர் வழங்க முடியும் எனவும் அதேசமயம் முச்சக்கர வண்டிகள் உண்மையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்பதை இலகுவாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.