பழங்களின் தூய தமிழ் பெயர்கள்

நாம் ஆரோக்கியத்துடன் வாழ காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றியமையாத ஒன்று, பழங்களில் நாம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆனால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பழங்களின் தமிழ் பெயர் தெரிவதில்லை, ஆங்கிலத்திலேயே பழங்களை நாம் அழைப்பதால் தமிழ் பெயர்களை மெல்ல மெல்ல மறந்துவருகிறோம்.

இந்த பதிவில், பழங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்

Apple
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot
சருக்கரை பாதாமி
Banana

வாழைப்பழம்
Bael Fruit வில்வப்பழம்
Berries பெர்ரிப்பழம்
BreadFruit சீமைப்பலா, கொட்டைப் பலா
Bullocks Heart / Ramphal
ராமசீத்தா பழம்
Carambola / Star Fruit
விளிம்பிப்பழம்
Citron
கடாரநாரத்தை
Citrus Limeletta / Sweet Lime
சாத்துக்குடி
Cherry
சேலாப்பழம்
Custard Apple
சீத்தா பழம்
Dates
பேரிச்சம்பழம்
Figs
அத்திப்பழம்
Guava
கொய்யாப் பழம்
Gooseberry
நெல்லிக்காய்
Grapes
கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Jamun Fruit
நாகப்பழம் /நாவல் பழம்
Jackfruit
பலாப்பழம்
Jujube Fruit
இலந்தைப்பழம்
Lemon
எலுமிச்சம் பழம்
Lychee
லைச்சி
Lime
தேசிக்காய்/எலுமிச்சங்காய்
Loquat
லக்கோட்டா
Mango
மாம்பழம்
Muskmelon முலாம் பழம்
Olives
ஆலிவ்
Orange
ஆரஞ்சு/தோடம்பழம்
Papaya
பப்பாளி
Peach
குழிப்பேரி
Pineapple
அன்னாசிப்பழம்
Peepal Fruit
அரசம் பழம்
Plums
ஊட்டி ஆப்பிள் / பிளம்ஸ்
Pomegranate
மாதுளம் பழம்
Pomelo
பம்பரமாசு
Sapodilla
சீமையிலுப்பை
Star Gooseberry
அருநெல்லி/அரைநெல்லி
Strawberry
செம்புற்றுப்பழம்
Tender Palm Fruit
நுங்கு
Watermelon
தர்பூசணி
Wood Apple விளாம்பழம்