ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வெண்டைக்காய் ஆனது வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். இருப்பினும் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. புற்றுநோய் முதல் நீரிழிவு நோய் வரை கட்டுப்படுத்தும் சக்தி உடையது.

இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதிலும், இதனை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிப்பது இன்னும் சிறந்தது.

அந்த வகையில் தற்போது வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். வெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம் நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்கு கழுவி அவைகளை சிறு துண்டு களாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள்.

பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியது தான். நன்மைகள் வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன.

கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

வெண்டைக்காய் தண்ணீரை நீரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம்.

அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம். வெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.