ரஷ்ய படைகள் மீது போர் குற்றங்களை முன்வைக்கும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 49 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில்,ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யப் படைகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நடந்த படுகொலைகள் குறித்தும் உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ரஷ்யப் படைகளால் 6,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,பொதுமக்களை படுகொலை செய்தல், பெண்கள் பலாத்காரம், குழந்தைகளை கொல்லுதல் போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் 6,036 போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.