கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பேருந்து நிலையம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ஏ- 32 வீதியின் முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் வெளிமாவட்ட பேருந்துகளும் உள்ளுர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் குறித்த பேருந்து நிலையத்தில் தரித்து செல்வது இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏ- 32 வீதியின் முழங்காவில் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ள போதும் இவ் வீதி ஊடாக பயணிக்கும் பேருந்துகள் உணவகங்கள் மற்றும் வீதியோரங்களில் தரித்துச் செல்வதாகவும் இதனால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குறித்த பேருந்து நிலையத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் உள்ளுர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் தரித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென பிரதேச சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சுமார் பதினொரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்ட்ட பூநகரி பொதுச் சந்தையுடன் கூடிய பேருந்து நிலையம் பொதுச் சந்தை என்பன எந்தவித பயன்பாடுகளுமின்றி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.