நடிகை சமந்தா தனது விவகாரத்தை அறிவித்த பிறகு அதிரடியாக பல விஷயங்கள் செய்து வருகிறார். புஷ்பா படத்தில் கிளாமராக ஆடியதும் அப்படி ஒன்று தான்.
சமந்தா
சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு மிக கடினமான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்பதால் Yannick Ben என்ற ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் அந்த படத்தில் பணியாற்றி வருகிறார்.
மேலும் சமந்தா நடித்து முடித்திருக்கும் Shaakuntalam படமும் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்
சமந்தா பற்றி பல்வேறு விதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் அடுத்து நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஹீரோ சமந்தாவை விட வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் கதைக்களம் காஷ்மீர் என்பதால் சமந்தாவுக்கு எப்படிப்பட்ட ரோல் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







