அஜித் தமிழ் சினிமா புதிய ரூட்டில் அதாவது தனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த வழியில் பயணிக்கிறார்.
வலிமை பட வெற்றி
கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆசை கடந்த பிப்ரவரி 24ம் தேதி தான் நிறைவேறியது.
படமும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்துவிட்டது, பல இடங்களில் ரஜினி, விஜய் படங்களின் சாதனையை கூட முறியடித்துள்ளது.
புதிய பட அறிவிப்பு
அஜித் தனது 61வது படத்தை வினோத்துடன் இணைந்து தான் பணியாற்ற இருக்கிறார். படத்திற்காக அவர் உடல்எடை எல்லாம் குறைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க லைகா தயாரிக்க இருக்கும் பட அறிவிப்பும் வந்தது.
சிவா-அஜித் கூட்டணி
இப்போது சமூக வலைதளங்களில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது வருங்காலத்தில் சிவா-அஜித் இணைய இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்க இருப்பதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.







