கொழும்பு துறைமுக நகரத்தில் அதிக முதலீடுகளுக்கு குறிவைத்துள்ள இந்தியா!

கொழும்பு துறைமுக நகரத்தில் எதிர்காலத்தில் இந்தியா முதலீடுகளை அதிகமாக குறி வைத்துள்ளதாகவும், அது தொடர்பில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், சமகால அரசியல் நிகழ்வுகள் அதற்கு ஏற்றவாறு அமைந்து வருவதாகவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1.12 பில்லியன் டொலர்களுக்கான முதலீடுகள், இந்தியா வியாபார முதலீடுகள் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. சாதகமான அரசியல் சூழ்நிலையில் இந்தியா முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த புதிய தீவுக்குள் இந்திய வணிகர்களுக்கு தேவையான சலுகைகளையும் அவர்களுக்கு ஏற்ற சட்ட அமுலாக்களுக்கும் சீர் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது மோசமான பொருளாதார நிலைமை காணப்படுகிறது. இந்தியாவுடன் உருவாகி வரும் அரசியல் இணக்கம் இந்த திட்டத்திற்கு பயனளிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட அவர் அரசியல் முன்னெடுப்புகள் மூலம் பழமையான நட்புகள் புதுப்பிக்கப்படுகின்றன.

மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய வர்த்தக பங்காளியான இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவித்த அவர், இந்திய பொருட்கள் இலங்கை வழியாக அனுப்பப்படுகின்றன.

எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் இயக்க வணிகத்தில் இருக்கும் வணிகங்களுக்கு வசதியான இடத்தில் ஒரு சர்வதேச நிதி மையமாக விளங்குவதனால் இந்த துறைமுக நகரத்தில் இந்திய முதலீடுகள் மூலம் அவர்களது வியாபாரம் மேலும் மேம்டுமெனவும், பிரபலமடையுமெனவும் அவர் கூறியுள்ளார்.

துறைமுக நகரத்தின் வர்த்தக மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த அவர்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தற்போது 10 முக்கிய கொள்கை கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் சீர்செய்தல் மற்றும் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றுக்குள் வங்கி மற்றும் நிதிக்கான விதிமுறைகள், வணிகங்களை நிறுவுதல் மற்றும் நிறுத்துதல், குடிவரவு, ஆகிய விடயங்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

தயாரிக்கப்பட்டு வரும் ஆவணம், வணிகம் செய்வதற்கான இலகுபடுத்தல்களை உள்ளடக்கியுள்ளதாகவும் , ஏப்ரல் மாத இறுதிக்குள், இந்த ஆவணத்தை வெளிக்கொண்டு வர முடியும் என்றும் தான் நம்புவதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்ரமசூரிய கூறியுள்ளார்.