வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் நார்ச்சத்து உணவுகள்

கொழுப்புத் தேக்கத்தினால் உருவாகும் தொப்பை வயிற்றை மின்னல் வேகத்தில் குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொப்பை அதிகரிப்பதால் டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், முதலில் தொப்பையைக் குறைக்க முயல வேண்டும். தொப்பையைக் குறைக்க இந்த வழியை பின்பற்றி பலன்களை உணருங்கள்.

10 கிராம் நார்ச்சத்து உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்
ஒருவர் தினமும் 10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொண்டு வந்தாலே சிரமமின்றி தொப்பையைக் குறைக்க முடியுமாம்.

கரையக்கூடிய நார்ச்சத்தைப் பெற தினமும் 2 ஆப்பிள் சாப்பிடலாம் அல்லது ஒரு கப் பச்சை பயறு/பச்சை பட்டாணியை உட்கொள்ளலாம்.

வயிற்றுக் கொழுப்பை நொடியில் கரைக்க உடல் உழைப்பு மிகவும் அவசியம் என்பதை ஒவ்வொரு நினைவில் கொள்ள வேண்டும்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்ச்சி அவசியமாகும்.

7-8 மணிநேர தூக்கம்
குறைவான தூக்கம் என்பது மெட்டபாலிசம் குறைத்து உடலில் கொழுப்புக்கள் அதிகமாகவும், வேகமாகவும் தேங்க வழிவகுக்கும்.

ஆகவே தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் 7-8 மணிநேர தூக்கத்தை கட்டாயம் பெற வேண்டும்.

இயற்கை பானம்
இளநீர் பானம் ஒரு கப் அன்னாசி ஜூஸுடன் ஒரு கப் இளநீர் மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் மற்றும் 1 சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து, உடனே குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் குடித்தால், உடல் சூடு குறைவதோடு, தொப்பையும் குறையும்.

உடல் எடையை சீக்கிரமாக குறைக்கும் சோம்பு தண்ணீர் – எப்போது பருக வேண்டும்?