நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்ற பலா பிஞ்சு

பலா பிஞ்சைப் பறித்து அதை தோல் சீவி, மற்ற காய்கறிகளைச் சமைப்பது போல கூட்டு செய்து சாப்பிடுவார்கள்.

இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

இது குறித்து விரிவாக பார்க்லாம்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும் – பலா பிஞ்சை தோல் சீவிவிட்டு வெறும் உப்பு, மஞ்சள், சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்த நீரை குடித்து உணவுக்கு முன்பாக சூப் போல குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். குறிப்பாக, வாயுத் தொல்லை மற்றும் செரிமானக் கோளாறினால் ஏற்படும் வயிற்று வலி ஆகியவற்றைத் தீர்க்க உதவும்.

தாகம் – சிலருக்கு என்னதான் உடல் நீரேற்றமாக இருந்தாலும் நிறைய தண்ணீர் குடித்தாலும் அடிக்கடி தாகம் ஏற்படும். அப்படி இருப்பவர்கள் பலா பிஞ்சை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், சிறிய துண்டு பட்டை, மஞ்சள், உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி தாகம் எடுப்பது குறையும்.

​அஜீரணக் கோளாறு – பலா பிஞ்சை முறையாக காரம் இல்லாமல் மிளகு, இஞ்சி சேர்த்து சமைத்துச் சாப்பிட ஜீரணம் அதிகரிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டால் அதுவே அஜீரணக் கோளாறுக்குக் காரணமாகவும் ஆகிவிடும். அதனால் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

​கண் பார்வை தெளிவாக – பலாக்காயில் வைட்டமின ஏ நிறைந்திருக்கிறது. இது கண் பார்வையைத் தெளிவாக்க உதவுகிறது. கண் பார்வை மங்குவது. மாலைக்கண், நிறக் குறைபாடு போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் பலா பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வர சரியாகும்.

புற்றுநோய் – பலாக்காயில் வைட்டமின் சி, மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மிக அதிக அளவில் இருக்கின்றன. இவை புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் அடிக்கடி கறிப்பலாவை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு.

தைராய்டு – ஹார்மோன் சமநிலையின்மையால் நாளமில்லா சுரப்பியான தைராய்டு சுரப்பி சுரப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய தாமிரச் சத்து மிக அவசியம்.

​நீரிழிவு – பொதுவாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடக் கூடாது. அதில் அதிக அளவில் சர்க்க்ரைச் சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் பலா பிஞ்சை சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இது ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு என்பதால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.