வெளியாகியது ஐபிஎல் 2022க்கான முழு அட்டவணை

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதுபோல் அல்லாமல் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா 5 அணிகள் என்ற அடிப்படையில் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அதில், குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறையும், அடுத்த பிரிவில் இருக்கும் 4 அணிகளிடம் தலா ஒரு முறையும், எஞ்சிய ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத உள்ளன.

இந்த நிலையில், ஐபிஎல் அட்டவணைப்படி, மார்ச் 26-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

2 -ம் நாளில், அதாவது மார்ச் 27 ஆம் தேதி மும்பை அணி, டெல்லி அணியுடன் மோதுகிறது. அன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.