வலிமை படத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரம் !

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த வலிமை திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியானது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவெற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இதற்கிடையே வலிமை திரைப்படம் மூன்றே நாட்களில் மொத்தமாக 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது இப்படத்தின் சென்னை சிட்டி வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படம் மூன்றாம் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ 1.36 கோடி வசூல் செய்துள்ளதாம். அதற்கு முந்தைய நாளை விட நேற்று அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக சென்னையில் மட்டும் தற்போது வலிமை திரைப்படம் 4.24 கோடி வசூல் ஈட்டியுள்ளது.