நிலவில் மோதப்போகும் ரொக்கெட்

எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நிலவில் மோத உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ரொக்கெட் தங்களுடையது இல்லை என்று சீன வெளியுறுத்துறை தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் ரொக்கெட்டின் பூஸ்டர் மோதி வெடிக்க உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர் பில் கிரே தெரிவித்தார்.

முதலில் நிலவில் மோதி வெடிக்க உள்ள ராக்கெட்டின் பூஸ்டர் 2015 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியது என தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதற்கு முந்தைய ஆண்டு நிலவு குறித்து ஆராய சீன அனுப்பிய Chang’e 5-T1ரொக்கெட்டின் பூஸ்டர் என நாசா தெரிவித்தது.

இந்நிலையில் நிலவில் மோத உள்ள ராக்கெட் தங்களுடையது இல்லை என்றும் Chang’e 5-T1 ரொக்கெட்டின் பூஸ்டர் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டதாகவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.