கொரோனோ முடக்கத்தால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மகனுடன் இணைந்த கிரிக்கெட் பிரபலம்

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக மகனை பிரிந்திருந்த இந்திய கிரிகெட் பிரபலம் தற்போது மகனுடன் இணைந்த நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஷிகர் தவானின் மகன் ஜோரோவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். உலகை அச்சுறுத்தும் கோஒரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு விமான போக்குவரத்தை தடை செய்தது.

இதன் காரணமாக தனது மகனை சந்திக்காமல் 2 ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறார் தவான். ஒரு பக்கத்தில் கிரிக்கெட் போட்டிகளால் தவான் பிசி ஆனதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தற்போது தவானும் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், ஜோரோவர் இந்தியா திரும்பியிருக்கிறார். ஆகவே, தவன் அடுத்த சில மாதங்களுக்கு தனது மகனுடன் நேரம் செலவிட முடியும். நாடு திரும்பிய தனது மகனை தூக்கி முத்தமிட்ட ஷிகர் தவன் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அத்துடன் ,” இரண்டு வருடங்களுக்கு பிறகு எனது மகனை பார்க்கிறேன்” என தவன் குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தனது மகனை சந்தித்த போது, ஷிகர் தவன் அவரை அள்ளி அணைத்து முத்தமிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கொரோனா பாதித்த தவான் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் குணமடைந்த பின்பு 3வது போட்டியில் விளையாடினார். இதேபோன்று சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, ஷிகர் தவான் ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.