இன்றைய ராசிபலன்கள் (16.02.2022)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி- 16- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்பு…..

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரி யம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கடகம்
கடக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற் படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்
துலா ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக் கையுடன் இருக்கவும். இன்று சரபேஸ்வரரை வழிபடவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொரு வர் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று அம்பிகையை வழிபடுவது மிகச் சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்
மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவை யற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

மீனம்
மீன ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட் டாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும் பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.