தமிழில் வெளியான அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரரின் திருமண அழைப்பு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார்.

இவர்களின் திருமணத்துக்காக அச்சிடப்பட்ட தமிழ் மொழியிலான திருமண அழைப்பிதழ்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக்கொண்டவரும்,அவுஸ்திரேலியாவில் வளர்ந்தவருமான வினி ராமனுக்கும், கிளன் மெக்ஸ்வெல் ( Glenn Maxwell)க்கும் 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது

அதன்பின்னர் கொரோனா காரணமாக பிற்போடப்பட்ட இவர்களது திருமணம் எதிர்வரும் மார்ச் 27-ம் திகதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் வினிராமனின் திருமணத்தையொட்டி அவரது பெற்றோரால் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தமிழ் அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மற்றும் இணயத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.