காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசளித்த பிரபாஸ்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காதலர் தினமான இன்று ராதே ஷ்யாம் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வேலண்டைன்ஸ் கிளிம்ப்ஸ் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.