நுரையீரல் பாதிப்பை காட்டும் அறிகுறிகள்!

நுரையீரல் சுவாசிக்கும் ஆக்சிஜனை வடிகட்டி, ஒட்டுமொத்த உடலுக்கும் கொண்டு செல்கிறது. நுரையீரலில் பிரச்சனை ஏற்படும் போது, உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைப்படத் தொடங்குகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

நுரையீரல் நோயின் பிடியில் இருப்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறிகள்

நெஞ்சு வலி

நீங்கள் நீண்ட காலமாக நெஞ்சு வலியை அனுபவித்து வந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், இது நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, இருமல் அல்லது மூச்சுத் திணறலை நீண்ட காலம் அனுபவித்தால், அதையும் தவிர்க்க வேண்டாம்.

சளி

ஒருவருக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சளி பிரச்சனை இருந்தால், அவருக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மூச்சுத் திணறல்

உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், அதுவும் சுமார் 15 நாட்கள் நீடித்திருந்தால், உடனே மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்த நிலைமை தீவிரமடைந்துவிடும்.

நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் என்ன?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும்.

உப்பு

உப்பு கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. சரியான அளவில் அதை உணவில் சேர்த்தால் பிரச்சினை கிடையாது. சுவாசிப்பதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உப்பை குறைத்து கொள்வது நல்லது. அதிக உப்பை உண்பது சுவாச மண்டலத்தில் அழுத்தத்தை அதிகரித்து வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இரவில் மது அருந்துதல்

இரவில் மது அருந்துவது பல இடங்களில் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. குறிப்பாக மாலை நேரத்திற்கு பின்னர் மது அருந்துவது உங்கள் நுரையீரலை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவாது. இது பின்னாளில் நுரையீரல் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.