நனைந்த செல்போனை சேதமாகாமல் சரி செய்வது எப்படி தெரியுமா?

ஒரு நிமிடம் பாக்கெட்டில் செல்போன் இல்லாமல் இருந்தால் கூட பலரால் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்போனுக்கு பலரும் அடிமையாக இருக்கிறோம் என கூறினால் அது மிகையாகாது!

அப்படிப்பட்ட செல்போன் தண்ணீரில் விழுந்தால்? அதை நினைத்தாலே நமக்கு ஒரு மினி ஷாக் வருகிறது அல்லவா? திடீரென பெய்யும் மழை, நீச்சல் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் நம்மை அறியாமல் குனிவது, குழந்தைககள் கையில் செல்போன் கொடுப்பது இப்படிப்பட்ட செயல்களால் செல்போன்கள் தண்ணீரில் விழுவது நிகழ்ந்து விடுகிறது.

இப்படி தவறுதலாக செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்யலாம்?

தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்து பின்புற கவரை நீக்க வேண்டும்.

சிம்கார்டு | SD Card களை நீக்க வேண்டும்.

பேட்டரியை தனியாக எடுத்து விட வேண்டும்.

அதிக ஈரம் / நீர் இருந்தால் வக்வம் கிளீனர் கொண்டு நீரை அகற்ற வேண்டும்.

வேலை செய்கிறதா என எந்த பட்டனை அழுத்தி சோதிக்க கூடாது.

பேட்டரி, சிம்கார்டு, SD Card களை நீக்கிய பிறகு மிருதுவான துணியை கொண்டு மேலாக தண்ணீரை துடைக்க வேண்டும்.

செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், அதை உலர்த்துவதற்காகவே “உலர்த்தும் பை” உள்ளது. அதை வாங்கி, அதில் போட்டு வைக்கலாம்.

அரிசி பையில் போட்டு செல்போனை அரிசியால் மூடி வைக்கலாம். அரிசி நீரை உரிஞ்சும் தன்மை உடையது.

ஈரத்துடன் இருக்கும் செல்போனின் பட்டனை அழுத்துவதோ, ஸ்விட்ச் ஆப் செய்வதோ கூடாது.

இரண்டு நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும். தானாகவே செல்போனில் ஈரம்பட்ட பகுதிகள் உலர்ந்துவிடும். இரண்டு நாள் கழித்து, செல்போன் பேட்டரி, சிம்கார்ட், SD Card களைப் போட்டு ஸ்விட்ச் ஆன் செய்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது கண்டிப்பாக CellPhone வேலை செய்யும். அப்படி செய்யவில்லை என்றால் அதிக நீர் உள்ளே புகுந்து செல்போன் கெட்டு விட்டதாக பொருள். செல்போன் ரிப்பேர் செய்பவரிடம் கொண்டு சென்று என்ன பிரச்னை என கண்டறிந்து அதை சரி செய்யலாம்.