ஐபிஎல் தொடரில் முக்கிய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக வரும் லாரா!

மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாராவுக்கு, பிரபல ஐபில் அணி ஒன்று பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் என்ற பொறுப்பை கொடுத்துள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு(2022) நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு இப்போதில் இருந்தே அணிகள் எல்லாம், தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில், வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், யாரை எடுப்பது? யாரை எடுக்க வேண்டாம்? என்ற தீவிர பேச்சு வார்த்தை சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் ஒரு சில அணிகள் தங்கள் அணிக்கான பயிற்சியாளர்கள் தேர்வு குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், ஐபிஎல் தொடரில் பவுலிங் அணி என்றழைக்கப்படும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களுடையே பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில், மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாராவிற்கு பேட்டிங் மற்றும் உத்திகளை வடிவமைக்கும் பயிற்சியாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அறிந்த சன் ரைசர்ஸ் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அதே போன்று பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைனை ஹைதரபாத் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.