பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வீட்டில் யாரேனும் ஒருவருக்கு தொற்று உறுதியானாலும், குடும்பத்த்தில் உள்ள அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என பிரித்தானியாவின் அறிவியல் ஆலோசனைக்கு குழு வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் Omicron வகை கொரோனா தொற்று விரைவாக பரவிவருவதை கவனித்த, பிரித்தானியாவின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE), வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய தொடர்புகளில் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் மொத்த பேரும் வீட்டிலேயே இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒரு வீட்டில் இருந்து ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அந்த வீட்டில் உள்ள மற்ற அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று SAGE அமைப்பின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக Omicron வைரஸ் பாதிப்பை பற்றி பேசுகையில், வீட்டில் உள்ள ஒருவர் கூட Omicron வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், “மற்றவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள்” இருப்பதாக நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

முன்னதாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவரும் தங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு நேர்மறை சோதனை செய்தால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஆலோசனை வழங்கப்பட்டதால், தற்போது SAGE இந்த கோரிக்கையை கொண்டுவந்துள்ளது.

ஏனெனில், கொரோனா வைரஸின் மற்ற வகைகளை விட Omicron மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்பதால், இந்த ஒழுங்குமுறைக்கு இப்போது மாற்றம் தேவை என்று SAGE நிபுணர்கள் நம்புகின்றனர்.