பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துன்பம்

கண்டியில் பேருந்துக்காக காத்திருந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போகம்பரை தொலைதூர பேருந்து நிலையத்தில் நின்ற 23 வயதுடைய யுவதியை சாரதி மற்றும் நடத்துனர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த யுவதி செல்லும் இடத்திற்கு பேருந்து செல்வதாக கூறி, கடத்தி செல்லப்பட்டுள்ளார். கொழும்பு – கண்டி தனியார் பேருந்திற்குள் ஏற்றி கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த குறித்த யுவதி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

இறுதியாக பணியாற்றிய வீட்டில் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறி அவர் அந்த வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியுள்ளார்.

அங்கிருந்து தப்பியவர் நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.