சர்ச்சையில் சிக்கினார் நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தினை இயக்கி நடித்து வருகிறார். தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் அந்த படமும் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. தற்போது மாதவன் நடித்து முடித்திருக்கும் Decoupled என்ற வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளிவந்திருக்கிறது.

கலவையான விமர்சனங்கள் கிடைத்து கொண்டிருக்கும் நிலையில் அதில் வரும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் மாதவன் ஒரு அறைக்குள் நுழைகிறார். அங்கே இஸ்லாமியர் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். மாதவன் அவர் செய்வது போலவே உடற்பயிற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த நபர் ஷாக் ஆக மாதவன் உடனே ஹிந்து கடவுளை வேண்டுவது போல செய்து சமாளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் அது இருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது போல இந்த Decoupled சீரிஸில் அதிக அளவு காட்சிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகும் வீடியோ இதோ..