நடிகர் ரஜினியுடன்திடீர் சந்திப்பு மேற்கொண்ட வி.கே.சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிசலா அவரை சந்தித்து பேசியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் திரைப்படத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றிருந்தார். அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.