மோட்டார் சைக்கிள் தடை செய்ய இருக்கும் பிரபல நாடு

வியட்னாம் நாட்டின் ஹனோய் நகரில் 2025ம் ஆண்டுக்கு பின் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டதை காட்டிலும் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

2030ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தடையானது வியட்நாமின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

வியட்நாம் நாட்டின் தலைநகரில் மாத்திரம் 56 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுகின்றன.

வியட்நாமில் குறிப்பிடத்தக்க அளவிலான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தனிஆட்கள், சொந்த வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது.