கொக்கடிச்சோலை ஆலய கிணற்றில் இருந்து சடலம் மீட்பு!

கொக்கட்டிச்சோலை – கச்சேனை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலத்தின் கழுத்து பாகத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலந்துறையை சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட முருகல் நிலையினால், கோயிலில் உறங்கச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நபரே கோயிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.