அஷ்வின் செய்த புதிய சாதனை!

இந்தியா நியூசிலாந்து இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் மும்பையில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

ஆட்ட நாயகன் விருதை மயங்க் அகர்வால் தட்டிச்சென்றார். மேலும், 14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பு அளித்த ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஷ்வின் தென் ஆப்பிரிக்கா வீரர் காலிசுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.