கனடாவில் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் மூலம் அவர் தனது முதல் சொந்த வீட்டை வாங்கவுள்ளார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ட்ரோய் ஆல்பினெட்.
இவருக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து ட்ரோய் பேசுகையில், இந்த பரிசு என் வாழ்க்கையை நிச்சயம் மாற்றும். நான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன், இப்போது என்னால் சொந்த வீடு வாங்க முடியும்.
நான் முதலில் பரிசு விழுந்ததை நம்பவில்லை. பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்த பின்னரே நம்பினேன்.
புதிய வீடு வாங்குவதோடு, என் வாகனத்தையும் தரம் உயர்த்தி கொள்வேன் என மகிழ்ச்சி துள்ளலோடு கூறியுள்ளார்.