இயக்குனர் விஜய் இயக்கத்தில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான படம் ‘தலைவி’.
மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், படம் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தமிழ், தெலுங்கு ஓடிடி வெளியீட்டை படம் வெளியான நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
அதன்படி அக்டோபர் 10ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு தவிர, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.