கைதாகிய மகனை பார்வையிட்ட சாருகான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு கோவா சென்ற கப்பலில் போதை பொருள் பார்ட்டி கொண்டாடியதால் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஜாமீன் கிடைக்காத நிலையில், நீதிமன்றம் என்பிசி காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஆர்யனுக்கு பக்கத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவரது குடும்பத்தினர் உணவு கொடுப்பதற்கு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஷாருக் மனைவி கௌரி கான் தனது மகனை சந்திக்க வந்த போது, மகனுக்கு மிகவும் பிடித்த பர்கரை கொண்டு வந்திருந்ததையும் அதிகாரிகள் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.

மேலும் NCB லாக்கப்பில், ஆரியன் விசாரணை நிறுவனத்திடமிருந்து சில அறிவியல் புத்தகங்களைக் கேட்டுள்ளார், அதை அதிகாரிகள் அவருக்குக் கொடுத்துள்ளனர்.

நடிகர் ஷாருக்கான் தனது மகனை சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு சென்ற போது ஆர்யன் தந்தையைப் பார்த்து அழுததாகவும், பின்பு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு ஷாருக்கான் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கானிற்கு பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், இதனை விரும்பாமல் இந்த சந்திப்புகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது