வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவித்தல்!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் முறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் திருத்தியமைத்துள்ளார்.

அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் வெளியுறவு அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற தேவையில்லை.

எனினும், அத்தகையவர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.