தொகுப்பாளினி அர்ச்சனாவின் தற்போதைய நிலை!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் விஜே அர்ச்சனா. தன் காமெடி திறமையால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா சில காரணங்களால் அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கி வந்த தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திடீரென உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அர்ச்சனாவுக்கு மண்டையோட்டில் மூளைக்கு அருகில் சின்னதாக ஒரு கட்டி இருந்துள்ளது. அதை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சை பெற்று 10 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார் அர்ச்சனா.

இதையடுத்து தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வரு அர்ச்சனா உடல் எடை குறைந்து காணப்படுகிறாராம். மேலும் மூக்கு வழியாக ஆப்ரேஷன் நடைபெற்றிருப்பதால், குரல் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

இதனால் சிகிச்சைக்கு பிறகு சரியாக பேச முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பதாகவும் அவரே கூறியுள்ளார். முழு ஓய்வு எடுத்து பூரண குணமடைந்த பிறகு பணியை தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளதால் தற்போது ஓய்வு எடுத்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்