தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன் தாரா. அய்யா படத்தில் ஆரம்பித்து தற்போது நெற்றிக்கண் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர். சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு காதலருடன் விமானத்தில் பறந்து வருகிறார்.
நயன் தாரா காதலித்து வரும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தினை நடந்தி வருகிறார். தற்போது நெற்றிக்கண் படமும் தயாரித்து வருகிறார் நயன் தாரா. ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் பிரமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா என்ற பெயரில் நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கியுள்ளார்.
அந்நிகழ்ச்சி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து நிகழ்ச்சியின் பிரமோ வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் டிடி நயன் தாராவிடம் கையில் அணிந்திருக்கும் போதிரம் விக்னேஷ் சிவனுடன் என்கேஜ்மெண்ட் மோதிரமா என்று கேள்விக்கு பதிலளித்துள்ளாராம். மேலும் அது எங்களுடைய நிச்சயதார்த்த மோதிரம் தான் என்று ஓப்பனாக கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.
மேலும் விக்னேஷ் சிவனை எந்த அளவிற்கு பிடிக்கும் என்ற கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளாராம். அந்நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கிறதாம்.







