சூப்பர் மாடல் மீரா மிதுன் தலைமறைவு!

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கும், கூத்துக்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு பெருமை அடித்துக்கொள்பவர் மீரா மிதுன்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, என்னை தவறாக தொட்டுவிட்டார் என சேரன் மீது பழியை போட்டு, அடுத்த நாளே கமல் குறும்படம் போட்டு சூப்பர் மாடல் முகத்திரையை கிழித்தார்.

தற்போது இந்த சூப்பர் மாடல் செம்ம பிரச்சனையில் சிக்கியுள்ளார், ஆம், சமீபத்தில் இவர் ஒரு சமுத்தினர் குறித்து தவறாக பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதை தொடர்ந்து அவர் மீது பல பேர் புகார் அழிக்க, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிறகு என்ன வழக்கம்போல் தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொள்பவர், தலைமறைவாகிவிட்டார்.

இப்படி பேசிவிட்டு, தலைமறைவு ஆவது தான் இவருடைய வாடிக்கை.