சூர்யா படத்தில் நடிக்க போட்டிபோடும் முன்னணி நடிகர்கள் – யார்யாரெல்லாம் தெரியுமா

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கிய இப்படம், ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா, அபண்டன்ஷியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இதன்முலம் பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக சூர்யா அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் சூர்யாவின் மாறா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அக்கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரஹாம் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.