கனிகாவின் பரபரப்பை கிளப்பிய வீடியோ !

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.


தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக பெண்களின் வெளிப்புற அழகுகளை வர்ணித்து வருவதன் பெயரில் விமர்சனம் செய்து வருகிறார்கள் பொதுமக்கள். இதுகுறித்து கனிகா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நீ ஒல்லியா இருக்க, நீ குண்டா இருக்க, முன்னழகு பெரிசாக இருக்கு, என்று Body Shaming செய்வதை விட, யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்க, வாழ ஆரம்பியுங்கள். ஒருவர் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம்”. என்று நல்ல கருத்தை கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.