குக் வித் கோமாளி புகழ், தந்தையர் தின ஸ்பெஷலாக அவர் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் புகழ்.

இவர் தற்போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் விரைவில் கலக்கவுள்ளார், தொடர்ந்து பல முக்கிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில் இன்று தந்தையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களின் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது புகழ் தனது அப்பாவிற்கு தன் கையால் சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்