ஆணழகன் அரவிந்த்சாமிக்கு பிறந்த நாள்.!

தளபதி திரைப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருந்தாலும், ரோஜா திரைப்படம் மூலம் நாயகனாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அரவிந்த்சாமி.

இவரை போல ஒருவரை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என பல பெண்களே விரும்பினர். அதன்பின் பல திரைப்படங்களில் அரவிந்த்சாமி நடித்துவிட்டார். ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.